Articles Writing
எமது இணையத்தளமானது முழு இலங்கையிலுள்ள மாணவர்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் வகையில் பல செயற்றிட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றது. அச்செயற்றிட்டங்களில் மிக முக்கியமான ஒன்றே "Article Writing" எனும் செயற்றிட்டம் ஆகும்.
"Article Writing" செயற்றிட்டமானது ஆசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் எழுத்தாற்றல் உள்ளவர்களுக்கு களம் அமைத்துக்கொடுக்க காத்திருக்கிறது. எமது மாணவர்களின் மறைந்துள்ள ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு களத்தை அமைத்து கொடுக்கும் நோக்கில் எமது இணையத்தளம் இந்த வழியைத் திறந்து கொடுக்கிறது. இச் செயற்றிட்டமானது Education More News இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வகையில் எங்களால் ஆரம்பிக்கப்பட்ட இச்செயற்றிட்டம், இலை மறை காயாய் இருந்த மாணவர்களுக்கும், ஆற்றலிருந்தும் தகுந்த களமில்லாமல் காத்திருந்த மாணவர்களுக்கும் கைக்கொடுத்தது அவர்களுக்கு தகுந்த களம் அமைத்துக்கொடுக்க காத்திருக்கிறது. எங்களுக்கு நீங்கள் அனுப்பும் ஆக்கங்களில் தமது சொந்த கருத்துக்களையும் சமகாலத்தில் நிகழும் நிகழ்வுகள் தொடர்பான தமது மனதில் தோன்றும் எண்ணங்களையும் எழுத்தாக்குவதற்கு இச்செயற்றிட்டம் வழிவகுத்து கொடுக்கிறது. இதன் ஆரம்ப செயற்பாடானது 2021 ஜுன் 10ம் திகதி முதல் தனது முதல் அடியை வைத்தது.
"Article Writing" என்றால் நீங்கள் விரும்பும் (கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் மற்றும் கதைகள்) போன்றவைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். எதுவாயினும் 500 சொற்களுக்கு மேற்பட்டிருக்க வேண்டும். (500 சொற்களுக்கு குறைந்த ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது) எமது இச்செயற்பாட்டின் மூலம் "Article Writing" ற்கு விருப்பமுடைய மாணவர்கள் ஆண், பெண் என இரு வட்ஸப் குழுக்களில் உங்களது ஆக்கங்களை அனுப்பி வைக்க முடியும். அதில், பெண்கள் தங்களது ஆக்கங்களை இலகுவாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பும் வண்ணம் பாதுகாப்பு முறைமைகள் அமைக்கப்பட்ட WhatsApp பயன்படுத்தி இருப்பதால் பயம் இன்றியம் நேரடியாக எங்களது WhatsApp இலக்கத்துக்கு நீங்கள் உங்களது ஆக்கங்களை அனுப்ப முடியும். இருபாலரும் "Article Writing" இல் கலந்துகொள்வதோடு எங்களது இணையத்தளம் காட்டும் WhatsApp குறியீட்டை அழுத்திய உடன் எங்களது வட்சப் இலக்கணத்துக்கு இலகுவாக செல்லும் வண்ணமாக வசதிகள் செய்துள்ளோம்.
இதில் சமகால தொடர்பிலான தலைப்புக்கள் மற்றும் முக்கியமாக சமூகத்தில் பேசப்பட வேண்டிய தலைப்புக்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் அனுப்ப முடியும். மாணவர்கள் தெரிவு செய்யும் தலைப்புகளில் மேற்கூறப்பட்ட இரு மொழிகளிலும் ஆக்கங்கள் சேகரிக்கப்பட்டு, அவை தகுந்த தகைமைகளுடைய ஒரு சிறந்த மத்தியஸ்தர்கள் உள்ளடங்கிய ஒரு குழுவின் மேற்பார்வையின் கீழ் பரிசீலனை செய்வதுடன் அதனை தொடர்ந்து அவை எமது வலைத்தளத்தில் வெளியிடப்படும்.
இச்செயற்றிட்டத்தின் மூலம் சமூகத்திற்கு ஓர் விழிப்புணர்வை வழங்குவதற்கு முடிந்துள்ளதுடன் எதிர்கால தலைவர்களான மாணவர்களின் கருத்துக்களையும் வழங்கி சமூக முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவதற்கும் இது வழியமைத்துள்ளது. தமது மனதில் எழும் கருத்துக்களை தெரிவிப்பதற்கும் அதன் மூலம் சமூகத்திற்கு ஒரு செய்தியை வழங்குவதற்கும் மாணவர்களுக்கு இது உதவி செய்வதோடு சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மாணவர்களின் சிந்தனா சக்தியை அதிகரிக்க உதவும் என்பதில் ஐயமில்லை.
நீங்கள் ஆக்கங்களை அனுப்பும் போது எவ்வாறு WhatsApp அனுப்புவது? என்ற கேள்விகள் உங்கள் மனதில் எழலாம். நீங்கள் எவ்வாறு அனுப்பினாலும் அது தரமான ஆக்கங்கள் என்றால் அது இணையத்தில் வெளியிடப்படும். அதாவது உங்களது ஆக்கங்களை நீங்கள் புகைப்படங்கள் எடுத்தும் அல்லது Type செய்தும் அனுப்பலாம்.
இவ்வாறு நீங்கள் அனுப்பும் ஆக்கங்கள் எல்லாவற்றுக்கும் எங்களது உத்தியோகபூர்வ வலைத்தள சான்றிதழ்கள் வழங்கப்படும் என்பதோடு இவற்றில் மக்களால் அதிகளவு தெரியப்படும், விரும்பப்படும் ஆக்கங்களுக்கு நாங்கள் பரிசும் வழங்க காத்திருக்கிறோம் என்பதை நீங்கள் கவனத்திற் கொள்ள வேண்டும். ஒருவர் எத்தனை ஆக்கங்களையும் அனுப்ப முடியும். ஆனால் நீங்கள் அனுப்பும் ஆக்கங்கள் தனித்துவமாகவும், பொருள் வாய்ந்ததாகவும், சிறந்த சமூக விழிப்புணர்வு கருத்துக்கள் சமூகங்களுக்கு முக்கியமான பல்வேறுபட்ட முக்கிய தகவல்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். நீங்கள் அனுப்பும் ஆக்கங்களின் தொடர் வரிசைக்கு அமைய அவற்றை நாங்கள் வலைத்தளத்தில் வெளியிடுவோம். நீங்கள் இலங்கையில் எப்பக்கத்தில் இருந்தாலும், ஏன் உலகத்தில் எங்கெல்லாம் இருந்தாலும் தமிழ் மொழி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் எமக்கு நீங்கள் ஆக்கங்களை அனுப்ப முடியும். நாங்கள் உங்கள் தரமான ஆக்கங்களை வரவேற்கின்றோம் நீங்கள் எங்களது வலைத்தளத்தின் ஊடாக தொடர்ந்தும் இணைந்திருங்கள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பல்வேறுபட்ட முக்கியமான தகவல்கள் உள்ளடங்கியதாக எனது வலைத்தளம் செய்திகளை வழங்க காத்திருக்கிறது.
நீங்கள் உங்களது ஆக்கங்களை அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் விளக்கம் இதுதான் 👇
நன்றி