Type Here to Get Search Results !

வாசகர் கவித்துளிகள்

 அன்னையின் ஆனந்தம்.

இம்சையும் இனிமே

பிஞ்சுக் கால்களால் நீ 

புரியும் தாண்டவம் 

பஞ்சமடி எனக்கு! பொய் 

பேசா ஊமையடி நீ 

வாய் அடக்கமுள்ள அழகு நீ 

மெய் பேசும் மழலையடி 

உன்னைக் கையில் 

ஏந்திக் காத்திடுவேனடி......!


புன்னம் புலரியிலே 

அழுதிடுவாய் உனக்காய் 

அன்னம் நான் ஊட்டினாலும்

அழுதிடுவாய் உன் கண்ணம்

இரண்டும் படைக்கையில்

இறைவன் வண்ணம் தேடி 

எங்கு அலைந்தானோ?


விழிகள் இரண்டையும் 

உருட்டிடுவாய் எதற்காக? 

மொழிகள் இன்றியே

இணைப்பாய் எனக்காக.

நளினங்கள் நானும்

புரிந்திடுவேன் உனக்காக

எழிலே, இசையிலும் இனிமை

செய்கிறாய் எதற்காக? 


அன்னையே..! என்னை 

நீ அழைப்பதே ம்மா...... 

என்னையே இழப்பேன் 

உன்னோசையில் சும்மா...

உன்னைப் பெற்றதால் 

என் பெயரோ அம்மா... 

என்னை நேசிப்பதால் 

நீதம் தருவேன் உம்மா...


சுமை

சூரியன் மறைந்தால் எனக்கென்ன 

சந்திரன் மறைந்தால் எனக்கென்ன 

என் பொழுது விடிவதும் மறைவதும்

உன்னைத்தேடி மகனே... 


உன்னை கண்டால்

ஆயிரம் சூரியன்கள் என் மனதில் 

ஆயிரம் சந்திரன்கள் 

என் இதயத்தில் 


என்றும் வருவாய் என் மகனே 

நீ இன்று வருவாய் 

கொண்டு வருவாய் என 

நான் எண்ணுகிறேன்...


வளர்ந்த சந்திரன்கள் 

எத்தனையோ தேய்ந்துவிட்டன 

என் மகன் வரவைத் 

தான் காணோம்... 


உனக்காக விழித்திருந்தேன் 

உன்னை வளர்க்க காத்திருந்தேன் 

ஆனால் இன்றோ உன் 

வதனம் காண விழித்திருக்கிறேன்...


சிறியதாய் நீ என் 

நெஞ்சில் உதைத்தாய் 

அந்த உதை வலிக்கவில்லை 

இன்னும் உதை என

ஆசைப்பட்டேன் 

உன் உதையில் அன்று 

கண் குளிர்ந்தேன்... 


பெரியவனாய் இன்று 

நீ உதைத்த உதை 

பொறுக்க முடியவில்லை 

சுமையின்றி வளர்த்தவனை 

சுமையெனக் கருதி விட்டாய் 

நீ கொடுத்த உதையில் 

முடங்கிக் கிடக்கிறேன் 

முதியோர் இல்லத்தில் இன்று....


என் கருவுக்குள் நீ

வாந்தி வருவது போல் 

ஓர் உணர்வு கண்டு

உடனடியாக சோதனை செய்து பார்த்தேன்...எ

என்னசாதனை என்னுள் இன்னோர் உயிர்.. 

முதல் அனுபவம் இது...


தூய்மையின் பூரிப்பை என்னிடம் 

இனி என் எல்லா 

சந்தோஷமும் உயிருக்குள் 

இருந்து என் உயிரான என்னை

அன்பினால் ஏங்க வைக்கும் 

உன்னிடம்.


அன்பின் சிசுவை நீ 

என் வயிற்றில் உதைக்க

கொஞ்சம் தாமதித்து தான்...

அன்பே என் தாய் உள்ளம் 

பதறி துடித்தது - நீ 

உதைக்க வேண்டும் என்று...


இறைவனிடம் கோடிமுறை 

தவமிருந்தேன் என் உயிரே 

முதல்முறை உன் பிஞ்சுக் கால்களால் 

என்னை எட்டி உதைத்தாய் 

அன்பே அது வலிக்கவில்லை 

கண்ணே கண்களில் ஆனந்தக் 

கண்ணீர் பெருகியது.. 


உன் பிஞ்சு விரல் பிடிக்கவும் 

என் நெஞ்சு மிகவும் துடிக்கிறது... 

உன் மழலை மொழி கேட்கவும் 

உன் தங்க முகம் பார்க்கும் 

கண்கள் தவமிருக்கின்றன. 

சீக்கிரம் என்னிடம் வந்துவிடு 

செல்வமே உன் வரவிற்காக 

காத்திருக்கும் அன்புத்தாய் நான்...


தோழமைக்கு சில வரிகள் 

அன்பு தோழியே - என் 

ஆருயிர் செல்வமே.....! 

என் வாழ்வில் சந்தித்த 

முதல் தோழியும் நீதான் - என் 

ஆயுளுள்ள காலம் வரை 

வருபவளும் நீயே.....! 


நம்பிக்கை எனும் பூட்டில் 

நம்பிக்கையுடன்... 

புதைந்திருப்பதை நட்பு....!

நம்பிக்கையானவன் நீ 

இருப்பது தானே 

என் நட்புக்கு ஒரு பூட்டு....! 


நான் நம்பினேன் சோதரரை...

ஆனால் அவர்கள் நம்பவில்லை...

என்னை பேரன்பு கொண்டேன்...

பெற்றோரில் அவர்கள் காட்டவில்லை

ஓரன்பும்... 


என் உறவு கிடைத்ததடி தோழி...

உன்னால் பெற்றேன் - உலக

உறவுகள் அன்பெல்லாம்

என் சோகங்கள் எல்லாம்... 

உன்னை கண்டால்... 

வெயில் கண்ட பனி போலாகிறது... 


சகோதரி இல்லாத 

குறை கூட - இன்று 

உன்னால் தெரியவில்லை...

என் வாழ்வில் 

கிடைத்த வரப்பிரசாதம்... 


என் தோழி நீ மட்டும் தானடி

உன் நட்பை விட 

எனக்கு நம்பிக்கை 

வேறு ஏதுமில்லையடி... செல்வமே... 

உன் நட்பை விட 

எனக்கு நம்பிக்கை 

வேறு ஏதுமில்லையடி... செல்வமே...


முட்கள் குத்துகிறது

அதிர்ஷ்டத்தை அடகு 

வைத்து விட்டுத்தான் - நான் 

மறந்துவிட்டேனோ... 

பிறந்ததிலிருந்து அதிர்ஷ்டத்தை 

சந்திக்கவே இல்லை - அதுதான்...!


தோல்விகளை மட்டும்... 

வரமாக வாங்கி வந்திட்டேன் - அது

வெற்றியின் அடையாளமும் கூட... 

அறிந்ததில்லை....! 


ரணகலப்பட்டு ரணகலப்பட்டு

வலுவிழந்து... 

இதய வலிகளைஉரமாக்கி விட்டு

புன்னகைக்கும் உதடுகள் 

ஒத்துழைக்கவுமிவில்லை....! 


ஒவ்வொரு அடிகளும் சறுக்கிவிட.... - 

பாதங்களில் தோல்வியின் விம்மல்கள்... 

எரியும் திரியில் எண்ணெய் 

வார்ப்பதற்கு பதிலாக... 

தண்ணீரை ஊற்றி 

எண்ணங்களை அணைக்கும்

இவ்விடையில்லா வாழ்வில் 

வெற்றியை எதிர்பார்ப்பது 

வினோதமோ?....!


அடிகள் வாங்கிய மலரைப் போல... 

கசங்கி காயப்பட்டு போனேன் - என்

கண்ணீரை எப்படி மொழிபெயர்ப்பது

என் வாழ்க்கைச் சுமைகள்

ஏனோ முட்களாய் குத்துகிறது எனக்கு....


மன வலிமை

மானிடனே... 

தூசி படிந்த மனக்

கதவினுள் - பூட்டிவைத்த சோகங்களை 

திறந்துவிட...

சாவி தேடி அலையாதே... 

அது திறக்கப்பட வேண்டிய 

கதவுகள் அல்ல... 

உடைக்க படவேண்டியவை 

உன் மன வலிமையைக் கொண்டு...

உடைத்து விடு....!

இனியும் வேண்டாம்... 

சோகங்களை பூட்டி வைக்க

கதவுகள் திறந்து விடு...

நன்றி.

படித்து சுவைத்தது

உங்களில் நான்

வாசகர்.

இது போல் நீங்களும் அனுப்ப (WhatsApp) இலக்கம் 0777316688

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.