Type Here to Get Search Results !

மாணவர்களின் வெற்றிக்கு கடைபிடிக்க வேண்டிய 10 பழக்க வழக்கங்கள்

மாணவர்களின் வெற்றிக்கு கடைபிடிக்க வேண்டிய 10 பழக்க வழக்கங்கள்


1. ஒழுங்கமைத்தல் மற்றும் திட்டமிடல் - நீங்கள் என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்று ஒரு திட்டத்தை உருவாக்குதல். அது உங்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்க்க உதவும்.

2. ஒரு நேரத்தில் பல்துறை சார் கற்பதை தவிர்த்தல் - கல்வி பல்தரப்பட்ட விடயங்களை உள்ளடக்கியது. அவைகளை மொத்தமாகப் ஒரே நேரத்தில் கற்பதற்கு உடல்,உள ரீதியாக முடியாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எல்லா பாடங்களையும் ஒரே நேரத்தில் கற்பது எமது மூலைக்கு கடின வேலைகளை கொடுப்பதாக அமையும். 

3. பகுதி பகுதியாக கற்றல் - கற்பது ஒரு வேடிக்கையான/சாதாரண ஒன்று அல்ல, அதை வற்புறுத்தி செய்வது மரதன் ஓட்டம் போல கடினமான ஒன்றாக மாறிவிடும். உங்களது வேலைகளை/ கற்றல்களை நிர்வகிக்கக்கூடிய பகுதிகளாக பிரித்து கற்கும் போது அவைகள் உங்கள் ஆர்வத்தை தூண்டும். மேலும், அது இலகுவாகவும் வேடிக்கையாகவும் மாறிவிடும்.

4. தூக்கம் - ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேர தூக்கம் தேவை. மேலும், அதை குறைத்து மதிப்பிட வேண்டாம். ஒரு நல்ல இரவு ஓய்வு என்பது உங்கள் கவனத்தை கூர்மையாகவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

5. நேர முகாமைத்துவம் - பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்த பிறகும், இரவு உணவு சாப்பிட்ட பிறகும் உங்கள் வேலையை சரியாக செய்கிறீர்களா? என்பதை சிந்தித்து ஒரு நேரசூசி அமைத்து வீட்டு சுவரில் ஒட்டுக.

6. குறிப்பு எடுத்தல் - குறிப்புகளை எடுத்துக் கொள்வது வகுப்பின் போது உங்களை அதிக ஈடுபாட்டுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல், பரீட்சை நேரம் நீங்கள் படிக்க வேண்டிய பரப்பளவைக் குறைக்கவும் உதவுகிறது. முழு பாடப் புத்தகங்களையும் படிப்பதை விட நீங்கள் எடுத்த பாடக்குறிப்புக்களை படிப்பது எளிதானது.

7. பகுப்பாய்வு செய்து கற்பது - இது வெளிப்படையாக இருக்க வேண்டும். கற்பதற்கு சரியான அல்லது தவறான வழிமுறைகள் இருக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா? உங்களது கையேடுகளை தொடர்ச்சியாகவும், துண்டு துண்டாகவும் வெவ்வேறு வகைகளில் பகுப்பாய்வு செய்யுங்கள். 

8. இடைவேளைகளை நிர்வகித்தல் - உங்களுக்கு சிந்தனை திறனை அதிகரிக்க்கூடிய இடம் ஒன்றை தெரிவு செய்தல். அது தொலைக்காட்சி மற்றும் ஏனைய கவனச்சிதறல்களில் இருந்து தூரமான இடமாக இருத்தல் சிறந்தது. மேலும், அது உங்கள் உள்ளூர் நூலகமாகவும் அல்லது படுக்கையறையில் உள்ள மேசையாகவும் இருந்தாலும் உங்களுக்கு அமைதியாக நேரத்தை செலவிட விரும்பும் ஒரு ஆய்வு இடத்தை ஒதுக்குங்கள்.

9. பொருத்தமான குழுவை தெரிவு செய்தல் - உங்களைப் போன்ற கல்வியில் ஆர்வம் உடைய ஒரு குழுவுடன் இணைந்து உங்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களை கலந்துரையாடல் மற்றும் பாடப்பரப்புகளை ஆய்வு செய்தல். நீங்கள் ஒருவருக்கொருவர் வினாக்களை தொடுத்து எல்லோரையும் ஒன்று சேர்ந்து, ஒருவருக்கொருவர் கற்பிப்பது சிறந்த வழி.

10. சந்தேகங்களை தீர்த்தல் - நீங்கள் பாடசாலையில் கல்வி கற்கும் போது உங்கள் ஆசிரியர், நண்பர்களிடம் உங்களது சந்தேகங்களை தீர்ப்பதற்கு கேள்விகளை கேட்க பயப்பட வேண்டாம். அதுவே உங்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை தீர்ப்பதற்கு சிறந்த வழியாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.