விந்தைமிகு உலகு
அது கோடைகாலம், பங்குனிமாத பகலவன் வாய்விட்டு சிரித்தது போல சுட்டெரிக்கும் வெயில். கீழிருந்து பார்த்தால் மயக்கம் வந்து வீழ்ந்திடும் அளவுள்ள ஒரு மலையுச்சி அதில் இருந்து நிலத்தை நோக்கி பாயும் நீர்வீழ்ச்சி அதன் கரைகளில் பண் புல்லால் வேயப்பட்ட கூரைகளாலான குடிசைகள் ஆங்காங்கே காணப்பட்டன. அங்கு வாழும் மக்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். இயற்கையை தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டனர். அவர்களது வாழ்க்கையும் தொடங்குகிறது. வெய்யோனின் வெழுத்திய வெயில் தொடுபரக்க பச்சிளம் குழந்தையை வயிற்றில் சுமக்கும் தாயின் அலறல் சத்தம், அங்குள்ள பெண்மணிகள் ஒன்று சேர்ந்து சென்றனர். சூரியன் வடக்கு நோக்கி சுழன்ற வண்ணம் தாயின் சத்தம் நின்று சிசுவின் அழுகை ஒலி வெளியே ஒலித்தது. அவ்வழுக்கைக்கு சொந்தக்காரன் வேறு யாருமல்ல நான்தான் அந்த பச்சிளம் மழலை.
இதமான காற்று, இதமான சூழ்நிலை, கொதித்தெழும் சூரிய வெப்பத்தினாலான இதமான நீர்நிலை, ஓடைகள், ஏரிகள், சாப்பிட இனிமையான தேன் மலைபோன்ற பழங்கள் புத்தம் புதிய காய்கறிகள் பிணி பீடை அற்றது, அறுவடை செய்த நெல்லை தவிடு நீக்கிய அரிசியை பொங்க சாப்பிட கூடியதுமான விலங்குகளை வேட்டையாடி வரவை கொள்ளும் வசதியுடன் பிறந்தவள் நான்.
என்னை சுற்றி எங்கும் காடுகள், மேடுகள், மலைகள், குன்றுகள், ஏரிகள், ஆறு, குளம், நதி நிறைந்த தேசமாகும். என் வாழ்வை இனிதே வாழ்ந்து கொண்டிருந்தேன். என் தாய் தகப்பனின் கண்ணற்ற பாசம். என்னுடன் உடன்பிறக்காவிடிலும் எனக்கு முன்பின் பிறந்த என் சக நண்பர்களின் புனிதமான நட்பு என்னை குதூகலிக்க வைத்தது. என்னுள் ஒரு எண்ணம் இந்த வாழ்க்கைக்கு சிறந்த காலநிலை இதமான கோடை காலம் என்பது ஆகும்.
நான் பிறந்ததிலிருந்து மலை எனும் விடையத்தை கேட்டாலும் பார்த்ததில்லை. அதைப் பற்றி சிந்தித்தும் இல்லை நானோ ஒரு சிறுமி அனுபவம் கிடையாதவள். என் பெற்றோர் என் ஊர் மக்கள் எல்லாம் கடந்த வாழ்வின் மூலம் பல அனுபவங்களை பெற்றவர்கள். பல வருடங்களாக மழை வரவில்லை. அன்று எல்லோரும் ஆழ்ந்த குழப்பத்தில் மூழ்கிக் கிடந்தனர். ஏன் இவர்கள் கவலைக்கிடமாகவும் குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கின்றனர் இவர்களது முகபாவனையும் வார்த்தைகளும் ஒன்றும் எனக்கு புரியவில்லை.
என் தாயிடம் "அம்மா எங்கு என்ன நிகழ்கிறது எல்லோரு பானையை கவிழ்த்து வைத்தது போல தலையை தொங்க விட்டு காணப்படுகின்றனர்." அப்போது அம்மா "மகளே பல காலமாய் மழையின்றி விவசாயம் ஒழுங்கற்று காணப்படுகின்றது. நீ ஆடிப்பாடி திரிந்த நீர்நிலைகளை பார் நீர் வற்றி காணப்படுகின்றது பச்சை பசேலென இருந்த காடு கண்ணாலும் பார்க்கமுடியாது மழுங்கி வறண்ட பூமியாக காணப்படுகிறது. பசியும் பட்டினியும் நம்மை வாட்டி எடுக்கின்றன குடிநீர் பஞ்சம் இதல்லாம் உனக்கு புரியவில்லையா!" என்று மனக் கவலையுடன் வெருமையுடனும் கூறிச்சென்றனர். அப்போது என் மனம் கவலை கடலில் விழுந்தது. நம் குடித்தனவர்கள் எல்லோரும் பரிதாப நிலைக்கு சென்று விட்டனர். என் மனம் அலை வீசியது இந்த சிறுவயதில் பாறை போன்ற மனக்கவலை என்று. நினைத்தபடி வீட்டு கொல்லைப்புறத்தில் மேலேறி ஒரு பாறை மீது தலையை சாய்த்து அமர்ந்திருந்தேன்.
மகளே! குழந்தாய் என எதிரொலி சத்தம் அம்மா விரைவாக வந்து இங்கு என்ன செய்கிறாய் என கூச்சலிட்டார். நான் மௌனம் சாய்த்தேன் வா மழை வேண்டி குலதெய்வத்திடம் வரம் கேட்போம். என்று என்னை கையோடு அழைத்து சென்றாள். அங்கு அங்கு சென்றால் பெண்கள் எல்லோரும் கும்மியடித்து நடனமாடி வழிபட்டனர். சிலர் கண்ணீரும் கம்பலையுமாக மழை வேண்டும் மழை வேண்டும் என கதறி அழுதனர். வேண்டுதல் கிரியைகள் எல்லாம் முடிந்தது எல்லோரும் கலைந்து சென்றனர். நாட்கள் ஓடியது நீல நிற போர்வை உடுத்திய வானில் மஞ்சள் அரைத்துப் பூசி பெண் போல சூரியன் இருக்கும் வானில் பஞ்சு குவியல் ஒன்று அதன் எதிர்திசையில் ஒருங்கே வந்தது போல முகில் கூட்டங்கள் தன் முகவரியை தொலைத்தது போல தொலைத்தது போலே வானில் அலைந்து கொண்டிருந்தது. என்னை அந்த முகில் கூட்டம் ஈர்த்தது. அதனை பின் தொடர்ந்தேன். விண் நோக்கி கண் பார்த்த வண்ணம் அதனை தொடர்ந்தேன் தொடர்ந்து கொண்டே சென்றேன்.
வெண்படலம் சூழ்ந்தது போல நீல வானை மறைத்தது அந்த முகில் கூட்டம். என் ஆழ் மனதில் ஏதோ நிகழப்போகிறது எனும் பதற்றம். இருபுறங்களிலும் முகில்கள் மெல்லமெல்ல ஒன்று சேர்ந்தவேளை திடிரென்ற சத்தம். சுற்றும் முற்றும் பார்த்தேன் யாரும் இல்லை. உடலெல்லாம் சிலிர்த்தது பலத்த காற்றும் ஒரு நொடி வேளை முழு நிசப்தம் திடுதிடுவென பாறைகள் மலையிலிருந்து உருள்வது போல ஒரு பாரிய சத்தம் அதைக் கேட்ட கணம் ஐயோ என்று அலறிய வண்ணம் குடையின் கீழ் மறைவாக அமர்ந்திருந்தேன். "சோ" என்ற சத்தம் பாறை வேர்களில் நீர் வடிந்து என் உடலை நனைத்தது. வெளிப்பக்கம் தலை சாய்த்தேன் என் ஊர் ஆர் ஓ! ஆ! ஹே! என்று கூச்சலிட்டு கைகளை உயர்த்தி ஆடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, எல்லோரும் இறைவா! எங்கள் வேண்டுதலை நிறைவேற்றினாயே, எங்களை வாழவைத்த கடவுளே உங்களுக்கு நன்றிகள் என்று சத்தமாக பிரார்த்தித்தனர். நான் அப்போது, அப்பா கடவுளுக்கு எதற்காக நன்றி கூறுகிறீர்கள் எல்லோரும் மற்ற மகிழ்ச்சியில் இருக்கின்றீர்கள் ஏதாயினும் சிறப்பு நிகழ்ந்ததா என்று ஆவலுடன் கேட்டேன். அவ்வேளை என் அப்பா என்னை தூக்கி தோளில் ஏற்றி நாம் இத்தனை நாட்களாக காத்திருந்த நமது கஷ்டங்களை தீர்க்க இறைவன் மழை உருவில் கீழ் இறங்கி நம்மைப் பார்க்கிறார் மகளே என்றார். அப்போது என் அப்பாவின் முகத்தைப் பார்த்து என் கைகளை விரித்து வாயை பிளந்த மணி வானை பார்த்தேன். கண்ணீர்த்துளிகள் கண் மேல் சிதறியது போல மழைத்துளிகள் மண்ணை நோக்கி சிதறியது. சிறிது நேரம் கழித்து என் சக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது என் சினேகிதி கோடையோ மாரியோ எல்லாம் ஒரு வகை சுவாரஸ்யம் தானே என்றாள். நான் அதற்கு அனுபவித்தால் தானே சுவாரஸ்யம் அது எனக்கு முழுமையாக கிடைத்தது.
நன்றி