அனைவருக்கும் கல்வி (கல்வியின் முக்கியத்துவம்)
அரசின் இன்றியமையா கடமைகளில் ஒன்றாக கல்வி கருதப்படுகிறது. ஒவ்வொரு நாடும் தனது வருமானத்தில் பெரும் பகுதியை கல்விக்காக செலவலிகின்றனர். ஆனால் இதன் பயன்பாடு பூரணமற்றதாகவே காணப்படுகிறது.
மனித சமுதாயத்திற்கு இடையில் படித்தவர், ஏழைகள், செல்வார்கள், நல்லவர்கள், தீயவர்கள் என பல்வேறு பாகுபாடுகள் நிலவுகின்றன. சமுதாயத்தில் இத்தனை ஏற்ற தாழ்வு இருக்க அவசியமா? எனவே இதை பற்றி சிந்திக்க வேண்டும். மனிதனுக்கும் பிராணிகளுக்கும் உள்ள வேறுபாடு பகுத்தறிவு என்பதாகும். பகுத்தறிவே இன்றும் மனிதனை உயர்ந்த நிலையில் வைத்துள்ளது. இதன் மூலமே மனிதன் மொழிகளை உருவாக்கவும், விஞ்ஞான ரீதியில் புதியன பலவற்றை உருவாக்கவும், புதிய உண்மைகளை கண்டுபிடிக்கவும் முடிகிறது.
கல்வியின் மூலமே ஒரு சமுதாயத்தில் பண்பாடும் விழுமியங்களும் அழிந்து ஒழியாது பாதுகாக்க பட முடியும். இவ்வாறான ஏற்றதாழ்வு, போட்டி, பொறாமை என்பவற்றை போக்கி எல்லோரும் ஓர் இனம் என்ற உயர்ந்த குறிக்கோளை தருவது கல்வி மட்டுமே. எல்லோரும் தனது தேவைகளை பூர்த்தி செய்து சந்தோஷமாக வாழ்வதற்கு கல்வி அவசியம். முற்காலத்தில் எல்லோருக்கும் கல்வி கட்கும் பாக்கியம் கிடைப்பது இல்லை. அவர்கள் கல்வியின் சிறப்பை அறியாதிருந்தனர். ஆனால் தற்போது பெரும்பான்மையான மக்கள் கல்வியின் சிறப்பை அறிந்து அதன் மூலம் பயன் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். முற்காலத்தில் பணம் உள்ளவர்கள் மாத்திரம் கல்வி கற்றனர். வசதி இல்லாதவர்கள் அவர்களின் அடிமையாகவே வாழ்ந்தனர். ஆனால் தற்போது அனைவரும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். ஏழைகள் கூட மிகவும் கஷ்டப்பட்டு அவர்களின் பிள்ளையை கல்வி கற்க வைக்கின்றனர். ஏனெனின் தன் பிள்ளை என்னை போல் கஷ்டப்பட கூடாது என்பதற்காக, கல்வி இல்லாதவர் கண் இல்லாதவர் போல.
எனவே அனைவரும் கல்வி கற்றால் மட்டுமே சமுதாயம் உயர்வடைந்து காணப்படும். "விலங்கொடு மக்கள் அனையத் இலங்குநூல் கற்றரோ டேனயவர்" என்பது வள்ளுவர் வாக்கு மனிதன் விலங்காக வாழக் கூடாது. அவன் மனிதனாக, மனித பண்புள்ளவனாக வால வேண்டும். அதற்கு கல்வியே உதவுகிறது.
ஒரு சமுதாயத்தில் ஒரு சிலர் கல்வியறிவு உள்ளவராகவும் மற்ற ஒரு சிலர் கல்வி அறிவு இல்லாதவராகவும் இருந்தால் சமுதாயம் சீர் பெறாது. கல்வியின் சிறப்பை உணர்ந்தமையால். ஒவ்வொரு நாட்டரசும் தனது குடி மக்களுக்கு பெறும் கடமையாக கொண்டு செயற்பட்டு வருகிறது. ஒரு குறிப்பிட்ட வயது வரை கட்டாய கல்வி புகட்டுவதட்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அரசு அளிக்கும் வாய்ப்பினை பயன்படுத்தாது சிலர் அலட்சியம், வறுமை, அறியாமை காரணமாகத் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தாது விடுகின்றனர். இதனால் பலர் வருங்காலத்தில் கல்வி பெரும் வாய்ப்பினை இழந்து விடுகின்றனர். பெற்றோர்களின் அலட்சியத்தால் பிள்ளைகள் கூலி வேலை செய்வதால் அவர்களின் வாழ்நாள் பூராகவும் ஏழையாக வாழ்வைக் கழிக்கின்றனர். பிள்ளைகள் பரிட்சையில் சித்தி பெறா விடின் என்ன செய்வது என்று கூறி ஆண்களை கூலி வேலைக்கும், பெண்களை சிறிய வயதிலேயே திருமணம் செய்து வைக்கின்றனர். இது பெற்றோர்களின் அறியாமை. ஆனால் பாதிக்கபடுவது அவர்களின் பிள்ளைகள் ஆகும். சிலர் பெண்கள் அதிகம் கல்வி கற்பதை தடுக்கின்றனர்.
சமூகத்தில் ஆண்கள் மட்டுமே பெரும்பாலும் கல்வி கற்கின்றனர். பெண்கள் இன்றும் அடிமைகளாகவே வாழ்கின்றனர் . அரசு பல வாய்ப்புக்களை மாணவர்களுக்கு வழங்குகின்றது. பரிட்சையில் சித்தி பெறாவிடின் மீண்டும் பரிட்சை எழுதும் வாய்ப்பை வழங்கினாலும் பலர் அதை அலட்சிய மாக விடுகின்றனர். இக்காலத்தில் பலர் இதை போல அறியாமை, அலட்சியம் என்பவற்றால் கல்வியின் முக்கியத்துவத்தை அறியாதிருகின்றனர். அனைவருக்கும் கல்வி என்றால் குடி மக்கள் அனைவரும் எழுத வாசிக்க தெரிந்தால் போதும் என கருதக்கூடாது. தான் பெற்ற கல்வியால் தனக்கும். தான் வாழும் சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் கல்வி அமைய வேண்டும். எல்லோரும் ஆசிரியர், மருத்துவர், பொரியிலாளர் போன்ற தொழில் மாத்திரம் கௌரவமான தொழில் என்று கருதுவது தவறு. தனது ஆற்றலை கண்டுபிடித்து தொழில் துறை கல்வியோ, தொழில் நுட்ப கல்வியோ, நுண்கலை கல்வியோ போன்றவைகளை தனக்கு விருப்பமான துறைகளில் தொழில் பெரும் வாய்ப்பினை பெற்றிட வேண்டும். அத்தகைய வாய்ப்பும் வசதியும் கிட்டும் போதுதான் அனைவருக்கும் கல்வி என்ற சொல் பொருளுடையதாக அமையும்.
இன, மத, சாதி வேறுபாடுகளால் பலர் இன்று கல்வி கற்பதை தவறவிடுகின்றனர். கிராமப்புற மக்களுக்கு கல்வி கட்கும் வசதிகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அவர்கள் கல்வி கற்க வேண்டுமாயின் பல சவால்களை கடந்து அவர்கள் கல்வி கட்க வேண்டும். சில கிராமங்களில் முறையான பாடசாலைகள் கூட இல்லை. அமர்ந்து கற்பதற்கு கதிரை இல்லை. இவ்வளவு பிரச்சினைகளை எதிர் நோக்கி பல மாணவர்கள் முன்னேறி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கின்றனர். . இவ்வாறு முன்னேறி செல்லும் மாணவர்கள் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றனர். நகர் புற மாணவர்களுக்கு அனைத்து வசதியும் கிடைப்பதாலே பலர் கல்வியை அலட்சியமாக கருதுகின்றனர். இந் நிலை மாற வேண்டும்.எல்லா மாணவர்களுக்கும் அனைத்து வித வசதிகளும் கிடைக்க வேண்டும். அத்தகைய ஒரு சூழ்நிலையில் தான் அனைவருக்கும் கல்வி எனும் சொற்றொடர் அர்த்தமுள்ளதாக அமையும்........................நன்றி............
Name= Fathima shafa
School=keppitiya Muslim Maha vidyalaya