நிகழ்நிலை செயன்முறையூடாக மேற்கொள்ளல்
1. 2022ம் ஆண்டிற்காக கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்நிலை விண்ணப்பப்படிவங்களைக் கொண்டு மாத்திரம் இடமாற்றத்திற்காக விண்ணப்பிப்பது கட்டாயமாகும். வேறு மாதிரிப் படிவங்களைப் பயன்படுத்தி அனுப்பப்படும் விண்ணப்பப்படிவங்கள் இடமாற்றச் செயன்முறையின் போது கருத்திள்கொள்ளப்படமாட்டாது.
2. நிகழ்நிலை விண்ண ப்பப்படிவத்தினுள் பிரவேசிப்பதற்காக https://nstt.moe.gov.lk எனும் இணைப்பினை உபயோகிக்கவும்.
3. நிகழ்நிலை விண்ணப்பப்படிவங்களை பூரணப்படுத்துவதற்குரிய ஆலோசனைகள் https://nstt.moe.gov.lk இணைப்பிலும் வழங்கப்பட்டுள்ளது.
4. விண்ண ப்படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலப்பகுதி 2022/04/17ம் திகதி முதல் 2022/04/30ம் திகதி வரையிலாகும்.
5. நிகழ்நிலையில் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களின் அச்சுப் பிரதிகள் அதிபரூடாக கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படல் வேண்டும். ஆகையால் விண்ணப்பப்படிவங்களின் அச்சுப் பிரதிகள் கல்வி அமைச்சினால் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் (2020/05/20) திகதிக்கு முன்னர் கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கக்கூடிய வகையில் விண்ணப்பப்படிவங்களைத் தாமதமின்றி அதிபரிடம் கையளிப்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும். தனிப்பட்ட ரீதியில்
அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படும் இடமாற்ற விண்ணப்பப்படிவங்கள் எந்தவித அறிவித்தலுமின்றி நிராகரிக்கப்படும்.
6. ஆசிரியர்கள் தமது இடமாற்ற விண்ணப்பப்படிவங்களுடன், கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்களின் பிரதிகளையும் இணைத்து அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
i. முதல் நியமனக் கடிதத்தின் அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
ii.. இறுதியாக உங்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதத்தின் அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
iii. கால அட்டவணையின் அதிபரால் உறுதிப்படுத்தப்பட்ட பிரதி
7. மாகாணப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிப்பதாயின் தங்களது விண்ணப்பப்படிவங்களுடன் மேற்கூறிய இணைப்புக்களுடனும் கூடிய 04 தொகுதிகளை முன்வைத்தல் வேண்டும்.
8. மருத்துவ ரீதியான விடயங்கள் ஏதும் அனுப்பிவைக்கப்படவேண்டும் எனின், மருத்துவச் சான்றிதழை விண்ணப்பப்படிவத்துடன் இணைத்து அனுப்புதல் வேண்டும். மருத்துவச் சான்றிதழை முன்வைக்கும் போது அங்கீகரிக்கப்பட்ட அரச வைத்தியர் ஒருவரால் உரிய நோய் நிலைமைகள் தொடர்பாக உறுதிப்படுத்தி சமர்ப்பிக்கப்படும் வைத்தியச் சான்றிதழ் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுடன் மருந்துத் துண்டுகள், கிளினிக் அட்டைகள் மற்றும் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்குரிய அறிக்கைகள் போன்றன மருத்துவச் சான்றிதழாக
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை விண்ணப்பதாரிகள் கருத்தில்கொள்ள வேண்டும்.
9. மேலே 6, 7 மற்றும் 8இன் படி அனுப்பிவைக்கப்படவேண்டிய ஆவணங்களை தவிர வேறு எந்தவொரு தரப்பினரதும் பரிந்துரைக் கடிதங்களையும் விண்ணப்பப்படிவங்களுடன் இணைத்து அனுப்புவதிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறு தெரிவித்துக்கொள்கின்றேன். அவ்வாறாக இணைத்து அனுப்புவதனூடாக எந்தவொரு விசேட வரப்பிரசாதமும் கிடைக்கப்பெறாது என்பதைக் கருத்திள்கொள்ளவும்.
10. விண்ணப்பப்படிவங்கள் கல்வி அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு இணைப்பு ஆவணங்களும்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலதிக ஆவணங்களை கல்வி அமைச்சிற்கு அடிக்கடி கொண்டுவந்து சமர்ப்பிப்பதிலிருந்து ஆசிரியர்கள் தவிர்ந்துகொள்ள வேண்டும்.
* விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்தி அதன் அச்சுப் பிரதியை உரிய தினத்திற்கு முன்னர் அதிபரிடம்
கையளிப்பது ஆசிரியர்களின் பொறுப்பாகும்.
* கிடைக்கப்பெறும் சகல விண்ணப்பப்படிவங்களையும் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைவாக
அதிபரது பரிந்துரையுடன் உரிய உப ஆவணங்களையும் இணைத்து உரிய தினத்திற்கு முன்னர் கல்வி அமைச்சிற்கு அனுப்பிவைப்பது அதிபரின் பொறுப்பாகும்.
* அதிபரது கடிதமின்றி எந்தவொரு ஆசிரியரது விண்ணப்பப் படிவங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதுடன் அடிக்கடி கல்வி அமைச்சிற்கு அனுப்பிவைக்கப்படும் விண்ணப்பப்படிவங்களும் நிராகரிக்கப்படும்.
11. இவ் விடயம் தொடர்பாக முரண்பாடுகள் ஏதும் இருப்பின் director.tligemis.moe.gov.lk எனும் மின்ன ஞ்சல் முகவரிக்கு அல்லது 0112784434 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தரலாம்.
பேராசிரியர் கே. கபில. சீ.கே பெரேரா செயலாளர்
Professor K.Kapila C.K.Pereras கல்வி அமைச்சு
Secretary Ministry of Education
மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள விபரங்களை பதிவிறக்கம் செய்யவும்.
1. விளக்கக் குறிப்பு
2. ஆசிரியருக்கான அறிவுறுத்தல்கள்
3. அதிபருக்கான அறிவுறுத்தல்கள்
நிகழ்நிலை செயன்முறை விண்ணப்பம்